ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மருது பாண்டியர் வரலாற்றையும், வீரத்தையும் பறைசாற்றும் நுால். ஆங்கிலேயருக்கு எதிரான ராஜதந்திர அரசியல் குறித்து விளக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை சீமை வரலாற்றில், முத்துவடுகநாதரின் படையில் போர் வீரர்களாக இருந்த சின்ன மருது சகோதரர்கள் தளபதியாகவும், அமைச்சராகவும் உயர்ந்துள்ளனர். ஆற்காடு நவாப் ஆக்கிரமித்திருந்த பகுதியை கைப்பற்றியதும் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை கொல்லங்குடியை ஆங்கிலேயர் கைப்பற்ற, காளையார் கோவில் கோட்டையில் மருது சகோதரர்கள் பதுங்கினர். பின், திருநெல்வேலியிருந்து தப்பி வந்த கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து சண்டையிட்டு, ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் வீழ்ந்த வரலாறும் கூறப்பட்டுள்ளது.
– முகில் குமரன்