சுற்றிலும் போடப்பட்ட வேலிக்குள் இருப்பது போன்ற அகதி முகாம் வாழ்வை, புனைகதை போல் விவரிக்கும் நுால். நாடற்றவர்களின் நிலையை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.
அகதி முகாமில் வசிப்போரின் மனநிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஒருவர் அகதியாக வேண்டிய நிர்ப்பந்தம், தனிமையின் தவிப்பு, தாய் நாட்டின் ஏக்கம் நிறைந்த நினைவுகள் எல்லாம் காட்சி போல் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டுப் போர், இனவாதம் போன்ற காரணங்களுக்காக சொந்த நாட்டில் அனைத்து உடைமைகளையும் துறந்து, உயிர் பிழைக்க மனிதர்கள் படும் துயரை துல்லியமாக பதிவு செய்துள்ளது. தாய் மண்ணை பிரியும் ஒருவர், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், சொந்த மண் மீதான பற்று அகலாது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் நுால்.
– ராம்