இந்தியாவின் வடபகுதியில் பழங்குடி மக்கள் நிலப்பரப்புக்காக நடத்தும் போராட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். ஊர்களையும், பாத்திரங்களையும் நிலப்பரப்பின் தன்மை மாறாமல் எடுத்துரைக்கிறது.
மலைக்காடுகளில் மனிதன் நடத்திய அலங்கோலத்தை, தாண்டவம் என அழிவின் ஆரம்பமாகச் சொல்கிறது. ஒடிய பழங்குடி மக்களின் இன்னல் அதிகாரவர்க்க தாக்குதல்கள், பள்ளத்தாக்குகளில் பதுங்கிய மக்களை வேட்டையாடியதை எடுத்துரைக்கிறது. மலைப்பகுதியில் சிறிய நிலப்பரப்பை மட்டும் பழங்குடியினருக்கு விட்டுக் கொடுக்கும் எண்ணத்தை சுரண்டல் என தோலுரிக்கிறது.
பழங்குடி மக்களின் வாழ்வியலைக் காட்சிப்படுத்தியுள்ள மொழிபெயர்ப்பு நாவல்.
– முகிலை ராசபாண்டியன்