உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு அறிவியல் ரீதியான உண்மைகளை விளக்கும் நுால். உணவு சம்பந்தமான எளிய கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் அமைந்துள்ளது.
உணவே மருந்து என்பது எக்காலத்துக்கும் ஏற்ற உண்மை. பசியுடன் சாப்பிட அமர்ந்து பசியுடனே எழுந்தால் நலம் பெருகும் என்பதை மருத்துவ அறிவியல் ஏற்றுள்ளது. எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை கிடக்கும் என்பதற்கு விடை கூறும் வகையில் அமைந்துள்ளது இந்த புத்தகம்.
உணவுப் பொருட்களின் தன்மை, அவற்றில் உள்ள சத்துக்கள், உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றி விரிவாக உரைக்கிறது. நவீன உணவு மற்றும் பாரம்பரிய உணவின் சாதக பாதகங்களை அறிவியல் ரீதியாக அலசி எடுத்துரைக்கிறது.
உணவை பகுத்தாய்ந்து உண்ண உதவும் நுால்.
– மதி