தேர்தல் முதல் ஓட்டுரிமை, உடல், நிலை பசிப்பிணி, முதுமை, உழவர் என யதார்த்தம் வழுவாமல், வாசிப்போர் மனதில் நேர்மறை கருத்து ஏற்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
இன்றைய இளம் பெண்களின் உடை நாகரிகத்தில் உள்ள தவறைச் சுட்டிக்காட்டியது பாராட்டிற்குரியது. அன்னை மீனாட்சியின் தாயுள்ளம் பற்றி, ‘கேட்பது கொடுப்பவள் தாயல்லள்; உனக்கு ஏற்றது கொடுப்பவள் தாயன்றோ’ என்று அசாதாரண ஆன்மிக உண்மையை விளக்குகிறார்.
இறை சக்தியின் மகத்துவத்தையும், பணிவு என்ற பண்பின் அவசியத்தையும் உணர்த்துகிறார். காதல் கவிதைகளிலும் தெய்வீகம் இழையோடுகிறது. அறியாமை என்ற இருளை அழித்து ஞான விளக்கேற்றி வைக்கிறது.
- – தி.க.நேத்ரா-