அரசு அலுவலக நடைமுறைகள் துறைவாரியாக நிரல்படுத்தப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு துறையும் பொதுமக்களுக்கு ஆற்றி வரும் பணிகள், அரசு தரும் சலுகை, அவற்றைப் பெற தகுதி நடைமுறையை விவரிக்கிறது.
ஊரக மற்றும் உள்ளாட்சி துறைகள் ஆற்றும் பணிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதி, வருவாய் துறையில் வழங்கும் சான்றுகள், ஆதரவற்ற விதவைகளுக்கான சலுகைகள், மின் இணைப்பு பெறும் நடைமுறைகளை விவரித்து வழிகாட்டுகிறது.
சேமிப்பு திட்டங்கள், சமூக நலத்துறை உதவிகள், வேளாண் துறை விவசாயிகளுக்கு வழங்கும் சேவை, சொத்துரிமை பதிவு, திருமணப் பதிவு, பாகப்பிரிவினை பதிவு என அரசின் நடைமுறைகள் பற்றி விவரிக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்