தமிழ் மொழியை வாழ்த்தும் மரபுக்கவிதைகளின் தொகுப்பு நுால். வள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கவிதை ஒன்று உள்ளது. மனிதர்கள் இயற்கையை மறந்ததால், கோபத்திற்கு உள்ளது குறித்து நயம்படக் கூறப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருப்பது அவசியம் என்பதை, ‘நகைச்சுவை உலகம்’ என்ற கவிதையில், ‘மனிதர்களின் மனவழுத்தம் போக்குகின்ற அருமருந்து’ என, நகைச்சுவையின் தன்மை கூறப்பட்டுள்ளது. தண்ணீரின் அவசியம், தண்ணீர் இல்லையென்றால் எதுவும் இல்லை என்பது புரிய வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெருமை, கொரோனா தொற்று ஒழிப்பு உள்ளிட்ட பல தலைப்புகளில் சுவாரசிய கவிதைகள் உள்ளன.
– முகில் குமரன்