தேநீர் பருகுவது போல் எழுதிய துளிப் பாக்களை தொகுத்து தயாரித்துள்ள நுால்.
இயற்கையை சமூக ஏற்றத்தாழ்வோடு பொருத்திப் பார்க்கும் கண்ணோட்டம் வளர்ந்துள்ளது என்பதை வாசிப்பவர்களால் உணர முடியும். கவிதைகள் சமூகச் சூழலை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. மழை, கடல், சூரியன், காடு, மரம் என இயற்கையைச் சார்ந்த கவிதைகளை சமூகத்தின் நிலைப்பாடோடு பிணைந்து தரப்பட்டுள்ளன. தொடர்ந்து ஜாதி, ஏழ்மை, தலைவர், தேர்தல் போன்ற சமூக கருத்துக்களை வழங்கி உள்ளார்.
இயற்கையை, அதன் இயல்பை, சிறப்புமிக்க செயல்பாட்டை, பல்வேறு நிலைப்பாட்டை எளிமையாக விரித்து செல்லும் துளிப் பாக்கள் நிரம்பிய நுால்.
– வி.விஷ்வா