தங்கமலர் என்பவர் இடைநிலைப்பள்ளி ஆசிரியை. தந்தையை இழந்தவர். வயதான தாய் மற்றும் இரண்டு தங்கைகள். இதில் ஒருத்தி மாற்றுத்திறனாளி. இருவரும் கல்லுாரியில் படிக்கின்றனர். தங்கமலர் தான் குடும்பத்தை தாங்குகிறார்.
பருவ வயது அவளையும் சீண்டிப் பார்க்கிறது. பேராசிரியரை காதலிக்கிறாள். அவர்களுக்குள் ஊடலால் விலகல். உயிர்த்தோழி அவர்களின் உணர்வுகளை புரிந்து காதலை புதுப்பித்து திரும்ப வளர்க்கிறாள். அதற்காக தோழி நடத்தும் நாடகம் சுவையாக உள்ளது.
வழக்கம்போல் அத்தை மகன் வில்லன். தங்கை ஓடுகாலி. லண்டனுக்கு படிக்கப் போகிறான் காதலன். பின் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு சுபமாக முடியும் நாவல்.
– சீத்தலைச் சாத்தன்