ஆவி குறித்து நடப்பு விஷயங்களுடன் பொருத்தி கூறும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். திகில், சிலிப்பு ஏற்படுத்துகிறது. ஆவி வாக்குமூலம், இறந்த பின் இதயம் துடிப்பு போன்றவை திகில் ஊட்டுகின்றன.
விசித்திர மின்னல் பந்து, மழை தயாரிக்கும் மனிதன், கணினியை மிஞ்சும் கால்குலேட்டர், இமைக்காமல் பார்க்கும் கண்கள் போன்ற தலைப்புகள் ஆச்சர்யம் ஏற்படுத்தினாலும் அறிவில் பூர்வமாக சிந்திக்க வைக்கின்றன. ஒவ்வொரு சம்பவத்திலும் கட்டுக்கதை, மூட நம்பிக்கை புதைந்து கிடக்கின்றன. இவை, சமூக வளர்ச்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளதாக யோசிக்க வைக்கிறது. ஆவி, ரத்த காட்டேரி எல்லாம், மனித மனதின் மறு உருவமாக சித்தரிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்