சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக தெரிவிக்கும் நுால்.
அவர் சர்வாதிகாரியாக வளர்ந்தது பற்றி கூறுகிறது. மனிதர்கள் மீது வெறுப்புணர்ச்சி ஏற்பட ஏதுவாகயிருந்த காரணிகளை ஆராய்கிறது. சிறு குணாதிசயங்களைக் கூட குறிப்பிட்டு நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது.
ஆரம்பமாக ஹிட்லரின் பிறப்பு, வளர்ப்பு என இளமைக் கால வாழ்க்கை அரும்புகிறது. தொடர்ந்து முதல் உலக யுத்தம், நாஜிக்கட்சி உதயம், இரண்டாம் உலக யுத்தம் என, கொடுமையான போர்கள் பற்றி தெரிவிக்கிறது.
இறுதியாக ஹிட்லரின் முடிவு, யுத்தத்துக்குப் பின், ஜெர்மனியில் ஏற்பட்ட மாற்றங்களை சொல்கிறது. ஹிட்லர் வாழ்க்கை வரலாற்றை அறிய விரும்புவோருக்கு உதவும் புத்தகம்.
– வி.விஷ்வா