ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இன்னல்களை சந்தித்து, தந்தை வழிகாட்டுதலில் மாவட்ட கலெக்டராக உயர்ந்த பெண்ணை கதாபாத்திரமாக உடைய, ‘தன்னம்பிக்கை’ என்ற சிறுகதை நம்பிக்கை தருகிறது.
பள்ளிச் சிறுமி பேச்சுப் போட்டியில் பங்கேற்று விமானத்தில் பயணித்தது நயமாக கூறப்பட்டுள்ளது. தவறான பேச்சால் அடிமையாக சிறுவன் வந்து அரசருக்கும் பாடம் புகட்டும், ‘சங்கப் புலவர்களும் சங்கப் பூக்களும்’ சிறுகதை ரசிக்கும்படி உள்ளது.
‘மா, பலா, வாழை’ சிறுகதையில் வரும் போட்டியும், அதற்கான இறுதி தீர்ப்பும் ரசிக்க வைக்கிறது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள சிறுகதை நுால்.
–
முகில் குமரன்