சமூகவியல் சார்ந்து 40 பொருண்மைகளில், 400 வெண்பாக்களை உடைய தொகுப்பு நுால். இயற்கையைப் பேணவும், உயிரினங்கள், மழலையர், மகளிர், முதியோரை போற்றி பாதுகாக்கவும் அழகிய பாடல்களின் வழியாக அறிவுறுத்துகிறது.
ஒரு கவிதையில், ‘மணக்கும் வயற்காடாய் மாமழையாய் வாழ்வளியாய் வாழும் இயற்கை’ என்கிறது. வறுமை நீங்கி வளம் காணவும், பிணி நீங்கி நலம் பெறவும், இல்லற வாழ்வில் மேன்மை பெறவும் உரிய நெறிகளைக் காட்டுகிறது.
ஊடக மேலாண்மையுடன் காலத்தின் அருமை கச்சிதமாக காட்டப்பட்டுள்ளது. சீரும் தளையும் சிதையாமல், சொற்கட்டும் சந்தங்களும் நிறைந்து கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன.
தமிழ் ஆர்வலர்களை ஈர்க்கும் நுாலாய் திகழ்கிறது.
– புலவர் சு.மதியழகன்