சமூக கரிசனை மிக்க சிந்தனையுடன் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். மவுனம் மட்டுமே சில கேள்விகளுக்கு சிறந்த பதில் என வலியுறுத்தி, பிரச்னை உணர்ந்து தலையிட கூறுகிறது.
சிரிக்க வைப்பது ஒரு கலை என, மறைந்திருக்கும் நகைச்சுவை உணர்வை தேடச் சொல்கிறது. ‘பகைமை எதற்கு’ என்ற கவிதை, வாழ்வு அர்த்தத்தை உணர்த்துகிறது. நாளை என்பது நமக்கில்லை, நினைத்ததை இன்றே முடி என்கிறது. எறும்பை பார்த்து சேமிப்பின் கலையை கற்க சொல்கிறது. உலகில் நிலையானது அன்பு மட்டும் தான் என்கிறது.
தாய் வழியாக சொர்க்கத்தை தேடுவதை விடுத்து, எங்கெங்கே அலைபாய்வதை ஒரு கவிதை கூறுகிறது. உழைப்பின் உன்னதத்தை பேசி நம்பிக்கை ஊட்டுகிறது. கவிதை எழுத முயற்சிப்போருக்கு உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்