தொழிலகங்களில் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறை பற்றி தெளிவாக விளக்கும் நுால். விபத்தை தவிர்க்கும் வகையில் உயர்ந்த நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையில் கவனக்குறைவால் விபத்து ஏற்படுகிறது. நடைமுறையை உணர்ந்து செயல்பட தவறுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்கும் வழிமுறைகள் விதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்டுள்ள விதிகளை, தொழிலகங்களில் கவனத்தில் எடுத்து நடைமுறைப் படுத்தினாலே விபத்து முற்றிலும் தடைபடும். அதற்கான உண்மையை புலப்படுத்துகிறது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பாக பணிபுரிவதற்கான வழிமுறையை தந்துள்ள நுால்.
தொழிலாளர் நலன் மற்றும் நிலையான உற்பத்திக்கு துணை நிற்கும் நுால்.
– ஒளி