வாழ்விற்கு தேவையான போதனை, நெறிமுறை தரும் நெடுங்கதைகளை உடைய நுால்.
துாக்கணாங்குருவியின் பண்பை எடுத்துச் சொல்கின்றன. அடுத்தவருக்கு தொந்தரவு தராத வண்ணம், முள்மரத்தில் தர்ப்பைப் புல் கொண்டு தான் அவை கூடு கட்டும். அதை முன்னிலைப் படுத்தி குடும்ப பிரச்னைகளை கூறும் கதைகள்.
மாப்பிள்ளை வீட்டார், பெண்ணை பெற்றவர் வசதியாக இருக்கணும்; பெண்ணும் சம்பாதிக்கணும்; அழகாக இருக்கணும் என எதிர்பார்ப்பதையும், பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு, நிலையான வேலை நல்ல வருமானம் இருக்கணும். மாமியார், நாத்தனார் தொந்தரவு கூடாது என எதிர்பார்ப்பதையும் அழகாக சொல்கிறது.
நடைமுறையில் இருப்பதை இந்த கதைகளில் படித்து புரியலாம்.
– சீத்தலைச் சாத்தன்