பழந்தமிழ் இலக்கியத்தில் ஆடல் கலை குறித்த செய்திகளை தொகுத்து தரும் நுால். சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்தே சிறப்பு பெற்றது பற்றி உள்ளது.
தொல்காப்பியத்தில் குறிப்பிட்ட ஆடல் கலை கூத்து பற்றிய விபரங்களை முன் வைக்கிறது. அகழாய்வில் கிடைத்த சிலைகளில் ஆடல் கலை அம்சம் குறித்த தகவலை தருகிறது. மொத்தம், 43 தலைப்புகளில் சான்றுகளை முன்வைத்து ஆராய்ந்து கண்டறிந்த வரலாற்று செய்திகளை சுருக்கமாக தொகுத்து தந்துள்ளது.
ஆடல் கலை பற்றிய அறிமுகத்துடன், அதன் அகம், புறம் சார்ந்த தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. கலைகளின் தோற்றம், வரலாறு குறித்து அறிந்து கொள்வதற்கான முயற்சிக்கு உதவும் வகையில் உள்ளது. ஆடல் கலையை வெளிப்படுத்தும் நுால்.
– ராம்