வீன நாடகத்தில் தமிழர்களின் பங்கு குறித்து விளக்கும் நுால். மொத்தம், 10 தலைப்புகள். நாடகக் கலையின் வீழ்ச்சிக்கு மாற்றாக அமைந்ததே நவீன நாடகம் என்கிறது. பழமையை பேசாமல், சமகால சிந்தனையை கையிலெடுத்து, தீர்வு சொல்வதாக நவீன நாடகத்தை கூறுகிறது.
நாடு விடுதலை பெற்ற பின், தொழில் நுட்ப வளர்ச்சியால் நலியத் தொடங்கிய நாடகத்திற்கு, புத்துயிர் அளித்ததை நினைவு கூர்கிறது. சமூக கருத்துக்களை எடுத்துரைத்தவர்களை அறிமுகம் செய்கிறது. தீவிரவாதத்தால் சிதையும் மனித உரிமைகளை, சங்க பாடல்கள் வாயிலாக எடுத்துரைக்கிறது. நவீன நாடக வரையறைகளை செயல்படுத்தும் போது ஏற்படும் சவால்கள் குறித்தும் கூறுகிறது. நவீன நாடகம் பற்றி அறிய உதவும் நுால்.
– டி.எஸ்.ராயன்