சிரிப்பை வரவழைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அதுவும் பழமையில் புதுமையை புகுத்தியவையாக உள்ளன.
ஆடு, மாடு, கோழிகளை, ஏன் கால்நடைகள் என்கிறோம் என கேட்கிற பாப்பாவுக்கு, ‘கால்களால் நடப்பதால்...’ என்று பதில் சொல்கிறார் தாத்தா. ‘நாமும் கால்களால் தானே நடக்கிறோம்...’ என்ற எதிர்வாதம் சிறப்பு.
பாம்பு பால் குடிக்காது, முட்டை சாப்பிடாது. எலி, பல்லி, பூச்சி தான் பாம்புகளுக்கு ஆகாரம். பாம்புக்கு வைக்கும் பால், பூனைகளுக்கு ஆகாரம் என புட்டு புட்டு வைக்கிறது.
தனிப்பட்ட பகையால் கொலை செய்தவன், கொலையாளி ஆகிறான். போர்க்களத்தில் எதிரி வீரனைக் கொன்றால் போராளி என பட்டம் கிடைக்கிறது. தண்டனையும் கிடையாது. படித்து சிரிக்க ஏற்ற சிறுகதை நுால்.
– சீத்தலைச் சாத்தன்