அன்பு, கருணை, கோபம், பொறாமை, நம்பிக்கையை வெளிக்கொண்டு வரும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 22 தலைப்புகளில் கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை.
திருநெல்வேலி உளுந்தம் பருப்பு சோற்றை, எள்ளு துவையலுடன் சுவைபட ஊட்டி பேசுகிறது. கொரோனா காலத்து மனித மாற்றங்களை பகிர்கிறது. நடைபயிற்சியில் கிடைப்பது உடல் நலம் மட்டுமில்லை; நல்ல நண்பர்கள், நாட்டு நடப்பு, தெரியாத விஷயங்களும் என கூறுகிறது.
இலக்கியம், சினிமா படைப்பாளிகள் இயல்பான குணம், படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் சுவாரசியங்களை வெளிக்கொண்டு வருகிறது. உணவை ருசியுடன் சமைத்த மனிதர்களின் குணங்களை ஒப்பிடுகிறது. அனுபவ பகிர்வாக திருநெல்வேலி மாவட்டத்தை மையப்படுத்தி படைக்கப்பட்டு உள்ள நுால்.
– டி.எஸ்.ராயன்