எண்ணங்களை சிலிர்க்க வைக்கும் 101 பாடல்களை உடைய நுால். பல்லவி சரணம் பிரித்து அமைத்திருப்பது சிறப்பு.
பாடல்கள் பாசம், கருணை, தோழன், தொழில், குடும்பம், குழந்தை, பக்தி, அன்பு, பண்பு என பல சிந்தனைகளின் வெளிப்பாடாக உள்ளது. முதல் பாடல் சரணத்தின் இறுதி வரிகளில், ‘தொடுவானம் நமக்காகும், வெண்மேகம் பூத்துாவும், நீயின்றி நானில்லை- உலகில் காதலின்றி எதுவும் இல்லை...’ என்ற வரிகள் கவர்ந்திழுக்கின்றன.
மீதமுள்ள 100 பாடல்களும் ஆர்வமூட்டுகின்றன. முழுவதையும் வாசிக்க இழுத்துச் செல்கிறது. அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய சொற்களை வைத்து அமைய பெற்றிருக்கின்றன. அனைவரும் படிக்க உகந்த நுால்.
– வி.விஷ்வா