பழைய பாரதத்திற்கு புதிய பார்வை தரும் நுால். அறத்தின் மாண்புகளை பொருத்தமாக காட்டுகிறது.
அறம் நிலை நிறுத்தல், சகோதர பாசம், பொறாமையின் தீமை, தியாகத்தின் பெருமை ஆகிய நீதிகளை சொல்லும் கதாபாத்திரங்கள் மனதோடு பேசுகின்றன. பகவத் கீதை போல், 18 தலைப்புகளும் படிப்போரை உயர்த்துகின்றன. சுய சிந்தனை, புதிய பார்வை உடைய கோணங்களில் மகாபாரதம் மறுவாசிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெண்ணியத்தின் குரலாக அம்பை பேசுகிறாள். பீமசேனன் வல்லபனாகி கீசகனை வதம் செய்கிறான். விதுரன் கண்ணனுக்குத் தந்த விருந்து முதல், வில்லை முறித்து போரை மறுத்து போவது வரை விளக்குகிறது. புதிய செய்திகள் பிரமிக்க வைக்கும்.
மற்றுமொருமுறை படிக்கும் ஆவலைத் துாண்டும் புதுமை நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்