கிராமத்தில் வேளாண் பணியுடன் இணைந்த மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தை, மண்ணின் மணம் மாறாது தந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கச்சம்மாள், கருவாயன், மீன்வாசம், குமராயி, ஆளாத்தி போன்ற உழைக்கும் மக்களின் பெயர்களை தலைப்பாக உடைய, 14 கதைகள் உள்ளன.
எளிய மனிதர்களின் வெள்ளை உள்ளத்தை கதைகளில் காண முடிகிறது. வட்டார உணவின் வாசனை நாசியில் பரவுகிறது. எளியவர்களின் கடும் உழைப்பும், கிராமத்தின் அன்றாட காட்சி வர்ணனைகளும் மனதில் பதியும்படி உள்ளன.
கிராம மக்களின் வாழ்வுநிலை நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது. வலியும் இடரும் மிக்க வாழ்க்கை இயல்பான நடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மண் மணம் மாறாத சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– ஒளி