அச்சரம் பிசகாமல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள நுால். முதல் பகுதி ஜோதிட கன்ம காண்டம் மூலத்தில் 45 பாடல்களும், அவற்றுக்கான உரைகளும் உள்ளன. அடுத்த பகுதி ஜோதிட சாந்தி தீபம். மூலமும் உரையுமாக, 51 பாடல்கள் உள்ளன.
பல்லக்கு சுமப்பவனும், அதில் இருப்பவனும் மனிதன் தான். ஒருவன் சுமப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில் பூர்வ புண்ணிய பாவம். இப்போதைய சுகத்துக்கமாக வருகிறது. எப்படி எல்லாம் தோஷம் வரும், தேடி வந்த பெரியோர்களை மதிக்காவிட்டால் மற்றும் பிறன் மனைவி விரும்பி இருந்தால் தோஷம் வரும் என்று குறிப்பிட்டு பரிகார முறைகளும் விளக்கப்பட்டுள்ளன.
கொலை, களவு, குடி, காமம், பொய், பொறாமை, குறை சொல்லுதல் போன்றவற்றை விலக்க தெளிவுபடச் சொல்லும் பாடல்கள் உடைய நுால்.
– சீத்தலைச் சாத்தன்