அன்றாட வாழ்வில் சுற்றி நகரும் ஒவ்வொரு அசைவிலும் அரசியல் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் நுால்.
மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட செய்திகளை நாகரிகமாக மக்களுக்கு எடுத்துக் கூறுகிறது. பெருந்தலைவர்களைப் பற்றிய செய்திகளை ஆரோக்கியமாக புகழுக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் விமர்சிக்கிறது.
இந்தியாவுடன் வெறுப்பில் இருந்த சர்ச்சில், ரூஸ்வெல்டின் கருத்தால் ஆவேசம் தணிந்தது. காந்திஜிக்கும், தாகூருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பினும் பல கருத்து வேறுபாடுகள் இருந்ததுண்டு,
நாட்டின் விடுதலைக்காக காந்திஜியும், நேருவும் வேறொரு கருத்தைக் கொண்டிருந்தனர். அது வெளிப்படையான வேறுபாடாக அமைந்தது.
இது போன்ற தகவல்களை காட்டுகிறது.
– வி.விஷ்வா