தவறுகளை உணர்ந்து, எதையும் மறைக்காமல் பாடும் வல்லமை பெற்ற அருணகிரிநாதரின் சந்தம் மிகுந்த சிந்தனைகளுக்கு உரையாக அமைந்துள்ள நுால்.
செந்துாரானை பாடும்போது செய்த தவறுகளை ஒப்புவிக்கிறார். மீன் ஒத்த கண்கள், பிறை வடிவ நெற்றியுள்ள பெண்கள் மீது மையல் கொண்டதால் நோய்களை பெற்றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
சதங்கை அணிந்த முருகனை கொஞ்சிப் பாடும் பாடல் வரிகள் அழகாக உள்ளன. ‘நிறைமதி முகம் எனும் ஒளியாலே...’ என துவங்கும் பாடல் பாராயணம் செய்ய ஏற்றது. அழகு முருகன் சன்னதியில் தினந்தோறும் பாடலாம். முருகன் புகழ் பற்றியதாக உள்ளன. திருப்புகழைப் பாட நெஞ்சு இனிப்பதை சொல்லும் பக்தி நுால்.
– சீத்தலைச் சாத்தன்