ஆரோக்கியமாக பற்களை பராமரிக்கும் முறையை விளக்கும் மருத்துவ நுால். நவீன மருத்துவத்தில் தொழில் நுட்ப வசதிகளின் முன்னேற்றம் பற்றியும் தெரிவிக்கிறது.
பற்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அகற்றாமல், எளிய முறையில் பராமரிக்கும் வழிமுறைகளை தருகிறது. பற்களின் அடிப்படை அமைப்பை விளக்கி, மருத்துவத் துறையில் சிகிச்சை வளர்ச்சி விபரத்தை தெரிவிக்கிறது. பல் பராமரிப்பு வழிமுறைகள், சொத்தையை நீக்கும் நவீன சிகிச்சை முறை குறித்து விளக்குகிறது.
குழந்தைகளுக்கு பற்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வுகளை முன் வைக்கிறது. வாய் துர்நாற்றம் போக்கும் வழிமுறைகளை தெரிவிக்கிறது. உதடு பிளவு மற்றும் அன்னப் பிளவுக்கு சிகிச்சை முறைகளை தருகிறது. பல் பராமரிப்புக்கு ஆலோசனை தரும் மருத்துவ நுால்.
– ராம்