எட்டணா விலையில், 113 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மிகப் பழைய நுால், மீண்டும் அதே வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மணீயம், ஐயாசாமீயம் ராஜேஸ்வரம் வெண்பாக்கள் மூலப்பாடல்களாக உள்ளன. அவற்றுக்கு உரைகளும் தரப்பட்டுள்ளன.
சென்னை சதுர்வேத சித்தாந்த சபைத் தலைவரால் இது எழுதப்பட்டுள்ளது. ஒருவருக்கு கிரக தோஷம் ஏற்பட்டால், பரிகாரமான விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அம்மணீயத்தில் நவக்கிரகங்கள் தோத்திரம், ராஜ்ஜியம், ஜாதி, பீடம், தானியம், புஷ்பம், துாபதீபம், ரூபம், நிறம், சுபாவம், திருஷ்டி, நாடி, பாதம், ராசி பார்வை, நட்சத்திரம், வக்ர நிவர்த்தி, கிரக பலம், தோஷங்கள் வெண்பா பாடல்கள் மூலப் பொருளோடு விளக்கம் பெற்றுள்ளன.
ஜோதிட அறிவை விரிவாக்கும் பழைய ஆவண நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்