இறைவனை நினைத்து படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு நுால். மொழி, இயற்கை வளம், சுற்றுச்சூழல் துாய்மை, பெண் பெருமை, உழைப்பின் பெருமை என மலர்ந்துள்ளன.
‘காதல் வந்தால் கவிதை வந்திடும், வறுமையில் கூட கவிதை மலர்ந்திடும், உணர்வின் வெடிப்பில் பிறப்பது கவிதை’ என, கவிதை கனியும் சூழல் விளக்கப்பட்டுள்ளது.
‘காலத்தை வென்றவர்கள் சரித்திரத்தில் நின்றனர்; காலத்தை கொன்றவர்கள் காணாமல் போயினர்; ஓய்வின்றி உழைப்பவர்கள் ஒருநாளும் தோற்பதில்லை’ என, உழைப்பின் மகத்துவம் பேசுகிறது. ‘பண்பாடு பேசியவர் பண்டைய தமிழர்; இன்றைய சமூகம் பணத்துக்கு அடிமை’ என மாறும் நியதியை தெளிவாக்குகிறது. சமூக அவலங்களை சாடும் நுால்.
–- புலவர் சு.மதியழகன்