இந்திய வரலாற்றில் சிப்பாய் கலகம் என குறிப்பிடப்படும் நிகழ்வை விரிவாக எடுத்துரைக்கும் நுால். முக்கிய தலைவர் ஆலும்பேக் சுட்டுக் கொல்லப்பட்டதை குறிப்பிடுகிறது.
வணிகம் செய்ய வந்த ஆங்கிலேய நிறுவனங்கள் பற்றிய குறிப்புடன் வரலாற்று புத்தகங்களில் இல்லாத தகவல்கள் உள்ளன. மங்கள் பாண்டே வரலாற்றை சிறு குறிப்பாக வழங்கியிருக்கிறது. ஆங்கிலேய அதிகாரிகள், குதிரையை சுட்டுக் கொன்றதும் பதிவாகியுள்ளது. விடுதலை வீரர்களை சாதி, மதத்துக்கு அப்பால் எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்