சுருங்கச் சொல்லி நிறைந்த பொருள் விளக்கம் தரும் குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கை, வாழ்க்கை என வனப்புகளை அள்ளித் தருகிறது.
வானவில் வடிவ பட்டாம் பூச்சியின் அழகை, பூக்களுடன் ஒப்பிட்டு பேசுகிறது. ‘மிகுந்த புனைவுடன், ஏறி வந்தபின் இறங்க முடியாமல் தவிக்கிறது தாமரை இலைத் தண்ணீர்’ என பாடுகிறது.
நம்பிக்கையை, ‘வானத்தை எந்த மரமும் தொட்டதில்லை; ஆனாலும் வளரும் எண்ணத்தை அது விட்டதில்லை’ என, அழகிய சொற்களின் சேர்க்கையாக மனதில் ஊற்றெடுக்க வைக்கிறது. அறுசுவையும் கவிதைகளுக்குள் அடர்ந்து விரவிக் கிடக்கின்றன. உள்ளார்ந்த பொருளும், அழகியலும் நிரம்பி ததும்புகின்றன. எல்லா வகையிலும் ரசிக்கும் மனநிலையை உருவாக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால்.
– மதி