உலகில் உயர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தரப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு உலக இலக்கிய அந்தஸ்து பெற்று தந்து முன்னோடியாக விளங்குகிறது.
உலக நன்மையை முன்வைத்துள்ள பொது நல சிந்னையில் ஊற்றாக மிளிர்கிறது. ஆன்மிகத்தின் அற்புத ஒளி பாய்ச்சும் விதமாக கருத்துக்கள் அமைந்துள்ளன. உள்ள ஒளியை தரிசிக்கும் வகையில், அச்சமற்ற மனமே இறைவனை காணும் இடம் என தரிசனத்தை தருகிறது.
வாழ்வின் முழுமையை தேடும் கருத்துக்களை உடையது. ரவீந்திரநாத் தாகூரின் ஒவ்வொரு வரியும் உணர்வை தொட்டு எழுப்புகின்றன. சார்பற்ற நிலையையும், அச்சமற்ற சிந்தனை போக்கையும் வெளிப்படுத்துகிறது. மேன்மையான கவிதைகளின் தொகுப்பு நுால்.
– ராம்