சித்தாந்தம், ஆன்மிகம், ஜோதிடம் சார்ந்த கருத்துக்களை உடைய நுால். ஞாயிறு அதாவது சூரியன் தான் உலகத்திற்கு ஒளி தருகிறது. ஒளி தான் வெப்பம் தருகிறது. வெப்பம் தான் உடலை காக்கிறது; செல்வ வளங்களை சேர்க்கிறது போன்ற உண்மையை உரைக்கிறது.
தியானத்துக்கு முன், கண்ணாடியில் முகம் பார்த்து பழகினால் வேறு சிந்தனை வராது. தருமபுரம், திருப்பனந்தாள், பேரூர், துலாவூர் ஆதீனங்கள் வெளியிட்ட சைவ சித்தாந்த நுால்களை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
ஆணவம் என்பது ஆள நினைப்பது, கன்மம் கல் மனதுடன் இருப்பது, மாயை கற்பனையில் மிதப்பது... இவற்றை ஒழித்து, இறைவனை துதிப்பது தான் சித்தாந்தம் என விளக்கம் அளிக்கும் புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்