ஜோதிடக்கலை போல கைமேல் பலன் சொல்லும் கைரேகைக் கலை பற்றிய உண்மையை உரைக்கும் நுால்.
கைகட்டை விரல் ரேகை ஒருவருக்கு உள்ளது போல அடுத்தவருக்கு அமையாது. அது மாதிரி தான் உள்ளங்கை அமைப்பும். அதில் உள்ள மேடுகளும், கோடுகளும் எதிர்கால பலனை அறிய உதவுவதாக கூறப்பட்டுள்ளது.
சிறிய கை உள்ளோர் சோம்பேறிகள். மிகவும் பெரிய கை உள்ளோர் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உள்ளங்கை ஒரே நீளம், அகலத்தை கொண்டு இருப்போர் மிகவும் மன உறுதிமிக்கவர்கள். சுண்டு விரல் நீளம் அதிகமானால் அவரின் நிலை உயரும்.
குரு, சந்திர மேடு என்று ஏழு கிரகங்களுக்கும் மேடுகள் உள்ளன. ஆயுள், திருமண ரேகைகள் பற்றி பலவிதமாக ஆராய்ந்துள்ள நுால்.
– சீத்தலைச்சாத்தன்