தமிழக பழங்குடி மக்கள் பற்றிய நாவல். அஞ்சு நாட்டுப் பள்ளத்தாக்கு பகுதியில் வாழ்ந்த குலத் தலைவன் ஆதன் மற்றும் நீலி பற்றியது.
சேர, சோழ, பாண்டியர் காலத்துக்கு முன், மக்களை வழி நடத்திய குலத் தலைவர்களில் ஒருவனே ஆதன். இவன் மக்களை காக்க எடுக்கும் முயற்சிகளும், மேற்கொண்ட போர்களும் நிறைந்துள்ளன.
நீலியின் காதல், பசுமை படர்ந்த குறிஞ்சி நிலம், ஆதனின் வீரம் என மனதை விட்டு நீங்காத வகையில் படைக்கப்பட்டுள்ளது. மலர்களின் மணம், பகலிலும் ஒளி வீசும் கல் என சுவையூட்டுகிறது.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்