வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மையக் கருத்தாக உடைய ஹிந்தி நாவலின் தமிழ் வடிவமாக மலர்ந்துள்ள நுால். போராட்டத்தின் போது பீஹார் மாநில கிராமம் ஒன்றில், உண்மையில் நடந்த நிகழ்வை மையமாகக் கொண்டுள்ளது.
போஜ்புரி என்ற மொழி பேசும் மக்கள் வாழும் மிகவும் பின்தங்கிய பலியா கிராம வாழ்வு அனுபவம் புனைவாக எழுதப்பட்டுள்ளது. நுாலாசிரியரும் இதில் பங்கேற்றதாக குறிப்பு உள்ளது. காந்திய வழியில் அகிம்சை, ஒத்துழையாமை போன்ற வன்முறையற்ற ஆயுதங்களால் நடத்தும் போராட்டத்தை வலியுறுத்துகிறது.
சுதந்திரம் பெறுவதற்கு முன் இந்தியாவின் நிலையை சித்தரிக்கிறது. நோய்களின் தாக்கம் பற்றிய விபரங்களை காட்டுகிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் சுதந்திர போராட்டத்தில் கிராம மக்கள் பங்கெடுத்ததை உரைக்கும் நுால்.
– மதி