வேதவியாசர், யாக்ஞவல்கியார் போன்ற ரிஷிகள், ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற ஆச்சாரியார்கள், ரமண மகரிஷி போன்ற ஞானியர், வள்ளலார், தாயுமானவர், திருமூலர், பட்டினத்தார் போன்ற மகான்கள் வாழ்க்கையில் இறையனுபவங்களை தொகுத்துள்ள நுால்.
விஷ்ணுவே வேதவியாசராய் ஞானமார்க்கத்தை பிரம்ம ஸுத்ரத்திலும், கர்மா மார்க்கத்தை ஸ்ரீமத் பகவத் கீதையிலும், பக்தி மார்க்கத்தை ஸ்ரீமத் பாகவதத்திலும் படைத்தளித்து உள்ளதாக பதிவிட்டுள்ளது.
ராமானுஜர் வைணவ கொள்கை பரப்பிய பாங்கு விவரிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், வள்ளலார், திருமூலர், பட்டினத்தார், தாயுமானவர் படைப்புகள் விளக்கப்பட்டுள்ளன. ஞான நிலை உயர படிக்க வேண்டிய நுால்.
-– புலவர் சு.மதியழகன்