அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பதிகம் பாடிய 276 சிவ தலங்கள் பற்றிய விபரங்கள் பதிவிடப்பட்டுள்ள நுால். பஞ்சபூத தல யாத்திரையை சிதம்பரத்தில் துவங்கி, காஞ்சிபுரத்தில் முடிப்பது உத்தமம் என்று கூறப்பட்டுள்ளது.
சிவாலயங்கள் அமைந்துள்ள இடம், இறைவன் – இறைவி பெயர்கள், தல சிறப்பு விவரிக்கப்பட்டுள்ளது. வில்வ அர்ச்சனை செய்தால் ஏற்படும் பலன்கள், திதிகளில் வழிபடும் நேரம், தலம் பற்றிய குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சிவனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள், வீடுபேறு அளிக்கும் தலங்கள், பிரதோஷ வழிபாட்டின் பயன்கள், அபிஷேக பொருட்களின் பலன்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆன்மிக யாத்திரை செல்வோர் படிக்க வேண்டிய நுால்.
– புலவர் சு.மதியழகன்