சமூகத்தில் மலிந்துள்ள வலி உணர்வுகளை அகற்றும் முயற்சியாக மலர்ந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பல காலக்கட்டங்களில், 1991 துவங்கி, 2023 வரை பல நிகழ்வுகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன.
எந்த கவிதையிலும் கடின சொற்களை காணமுடியவில்லை. சிக்கலான குறியீட்டை காட்டவில்லை. பூடகம் போடவில்லை. நேரடியாக எளிய மொழிநடையில் கருத்தை வெளிப்படுத்தி உள்ளன. பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சுதந்திர மனப்பான்மையின் அவசியம் பாடுபொருளாகியுள்ளன.
‘சமூகத்தில் சிந்தனை மாற்றத்துக்கு, ஒவ்வொருவரும் வலி, இழப்பு, அநீதி அனுபவிக்க வேண்டியது இல்லை. கூர்மையான சமூகப் பார்வையால் விழிப்பை வெளிப்படுத்த முடியும் என நிரூபிக்கும் நுால்.
– ஒளி