சமூக அக்கறையுடன் படைக்கப்பட்ட மரபு கவிதை நுால். கவிதைகளில் பொதுவுடைமை கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. காதல், குடும்பம், சமூக பொறுப்புணர்வு, இளைஞர்கள் எதிர்காலம் என விவரிக்கிறது.
பக்தி பெயரால் நடக்கும் மோசடிகளை தோலுரிக்கிறது. சமுதாய் சீர்கேடுகளை தகர்த்தெறிந்து, அறிவு ஆயுதம் ஏந்தும் வரிகள் ஏராளம். இயற்கை வளத்தை பாதுகாக்கும் அவசியத்தை, மண் மணம் குறையாமல் சொல்கிறது. அறவழி வாழ்வின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அறியாமை இருளை அகற்றக் கூறும் கவிதை, சமூக நடப்புகளின் பிரதிபலிப்பாக உள்ளது.
அழகிய சொற்களுடன், ‘மழை மட்டும் அழகல்ல; வெயிலும் அழகு தான்’ என எடுத்துரைக்கிறது. ஆக்கப்பூர்வ சமுதாயத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்