அமெரிக்காவில் கறுப்பின மக்கள் இன வெறிக்கு எதிராக எழுச்சி கொண்டது பற்றி விவரிக்கும் நுால். அடிமை முறை ஒழிக்கப்பட்ட போது நிகழ்ந்தவற்றை தெளிவாக விவரிக்கிறது.
கறுப்பினத்தவர் அழைத்து வரப்பட்ட வரலாற்றை படம் பிடிக்கிறது. அவர்கள் எப்படி எல்லாம் ஒடுக்குமுறைக்கு உள்ளாயினர் என்பதை எடுத்து கூறுகிறது. குறைந்தபட்ச அளவில் கூட மனிதத் தன்மையின்றி நடந்த செயல்களை விவரிக்கிறது.
அடக்குமுறைக்கு எதிராக, திரண்டு எழுந்து உத்வேகத்துடன் போராடி குவித்த வெற்றிகளை முறையாக பதிவு செய்துள்ளது. உரிமையை மீட்டு எடுத்தது குறித்த விபரங்களையும் கண்முன் நிறுத்துகிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் வாழ்க்கை போராட்டத்தையும், அதை வழி நடத்திய தலைவர்களின் செயல்களையும் விவரிக்கும் நுால்.
– மதி