சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டிய தியாகியின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள நுால். வெற்றியும், தோல்வியும், துயரமும் நிறைந்த நாட்களை வெளிப்படுத்துகிறது.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியுடன் போட்டியிடும் விதமாக சுதேசி கப்பலை வெற்றிகரமாக ஓட்டியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. தேச துரோக வழக்கில் ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்டு கொடுந்துயரம் அனுபவித்தார். தியாகங்கள் செய்தவரின் இறுதிக்காலத்தை துயரம் மிகுந்த எழுத்துகளால் பதிவு செய்கிறது.
கடும் உழைப்பில் ஈட்டிய செல்வத்தை இழந்து, வறுமையில் வாடி, மளிகைக் கடையில் பணி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதை உருக்கமாக விவரிக்கிறது. குறைந்த வாடகையில் சுடுகாடு அருகே வீட்டில் வாழ்ந்ததை குறிப்பிடுகிறது. தியாக வாழ்வை படம் பிடித்து காட்டும் நுால்.
– மதி