சமூகத்தில் நல்லுணர்வை வளர்க்கும் சிந்தனைகளை தட்டி எழுப்பும் வகையிலான கட்டுரைகளின் தொகுப்பு நுால். பிரச்னைகளில் கவனம் செலுத்த மறுக்கும் போக்கை கவலையுடன் சாடுகிறது.
சமூக பொறுப்பை வலியுறுத்துகிறது. கல்வியும் வாழ்க்கையும், கல்வியும் அறிவும், சமகால பிரக்ஞை, மனமும் சூழ்நிலையும், வாழ்க்கை மாற்று, வியாபாரம் விளம்பரம் வாழ்க்கை, உறவுகள், இலக்கிய பயிற்சி போன்ற தலைப்புகளில் கருத்துகள் விதைக்கப்பட்டு உள்ளன.
உரையாடல்களின் போது கவனித்தவற்றை முறைப்படுத்தி சமூக சூழலை கணித்து கருத்தாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூகம் ஒவ்வொரு நடைமுறையிலும் பின்தங்கியிருப்பதை சுட்டிக்காட்டி உணர்வூட்டுகிறது. சினிமா, இலக்கியம், நடைமுறை வாழ்க்கையில் உள்ள அபத்தங்களை சாடுகிறது. சிந்தனையை துாண்டும் நுால்.
– மதி