மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று செய்திகளை தாங்கிய நுால். எழுத்தாளர்கள் வெவ்வேறு சமயங்களில் எழுதிய செய்திகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. சூடான, சுவையான அறியாத தகவல்கள் வியப்பூட்டுகின்றன.
முகப்பு கவிதை பாரதியின் கையெழுத்திலே அச்சாகியிருப்பது பரவசம் தருகிறது. ‘கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்’ என்ற பண் அமைப்பு நெஞ்சை அள்ளுகிறது.
பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வ அருள் கிடைத்து விடும். இது, மகாகவி எழுத்து நடையிலும் பெரும் கவிஞன் தான் என நிரூபிக்கிறது. புதுவை பாரதி என்ற பெயரில் சிற்றிதழ், புதுச்சேரியில் இருந்து வருவது சிறப்பு. பாரதி பற்றிய பாரதிதாசனின் கருத்தும் அறிய வேண்டியது. பாரதி பற்றிய ஆவண நுால்.
– சீத்தலைச்சாத்தன்