இந்திய விடுதலை போராட்டத்தில், நாட்டுக்காக அர்ப்பணித்த பெண்களின் வீர செயல்களை எடுத்துரைக்கும் நுால்.
சிப்பாய் புரட்சி காலக்கட்டத்தில் இருந்த ராணி அவந்திபாய், பேகம் ஹஸ்ரத் மஹால் போன்றோரின் தியாகத்தை நினைவுகூர்கிறது. ஆஷர் மில் போராட்டத்தை, பத்மாவதி வழியாக எடுத்துரைக்கிறது.
காந்தியின் போராட்ட குணம், செய் அல்லது செத்துமடி வாசக ஈர்ப்பால், வானொலி சேவை துவங்கி, போராட்டங்களை மக்களுக்கு தெரிவித்த உஷா மேத்தாவின் துணிச்சலை கூறுகிறது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சிறை சென்று, 1946ல் இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையில் இருந்த அம்மு சுவாமிநாதனின் சமத்துவத்தை பேசுகிறது.
சுதந்திர போராட்டத்தில், பெண்களின் தாகத்தை எடுத்துரைக்கும் நுால்.
–- -டி.எஸ்.ராயன்