காலநிலை மாற்றம் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூர்ந்து நோக்கும் நுால். புவிவெப்ப அபாயம் சூழ்ந்துள்ள காலத்தில், மனித குலம் வரலாற்றில் இந்த பாதிப்பை எப்படிக் கடந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.
இந்த புத்தகம், எட்டு பகுதிகளாக உள்ளது. முதலில் பூமியில் நிலவும் காலநிலையை நிர்ணயித்து வரும் இயற்கை பேரியக்கம் குறித்து சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறது. நாகரிக வளர்ச்சி காலத்தில் விவசாய குடிகள் உருவான போது ஏற்பட்ட மாற்றங்களை முறையாக பதிவு செய்கிறது.
தொடர்ந்து நகரங்கள் வளர்ந்த போது, காலநிலையில் என்ன வகையான மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன என்பதை விளக்குகிறது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றம், வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்று என்பதை விளக்கும் நுால்.
– மதி