யூத இனத்தவர், சொந்தமாக நாடு உருவாக்கிய வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்து தரும் நுால். கிறிஸ்துவ புனித நுாலான பைபிள் தோன்றியது முதல், இன்றைய காலம் வரை விபரங்களை தருகிறது.
உலகில் சொந்த நிலத்தை தேடி அலைந்த இனத்தின் வரலாற்று தகவல்கள் உள்ளன. மத்திய கிழக்கில் இஸ்ரேல் என்ற நாடு உருவானது எப்படி, அது யூதர்களின் தாய் நிலமா என்ற கேள்விகளை முன் வைத்து பதில்களை தருகின்றன.
பாலஸ்தீனியர்களுடன் ஏற்பட்ட பகை, வளம் குறைந்த நிலத்தில் செல்வம் பெருக்கிய விதம், இஸ்ரேல் பகுதியில் நிலவும் சமூக அமைப்பை அறிமுகம் செய்கிறது. அந்த இனத்தவர் உலகே வியக்கும் அறிவியல் சாதனைகளை நிகழ்த்தி வருவது குறித்தும் விபரங்கள் உள்ளன. இஸ்ரேல் வரலாற்று நுால்.
– ஒளி