உலகில் கண்ணுக்குப் புலப்படாத தீய சக்திகளுக்கு எதிராக உயிரை பணயம் வைத்து போராடிய சாமானியர்களின் வரலாற்றை விவரிக்கும் நுால். எந்த பின்புலமும் இன்றி பலம் பொருந்திய அரசுகளின் குற்றங்களைக் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியதை வெளிப்படுத்துகிறது.
உலகெங்கும் மனித உரிமை மீறல் சாதாரணமாக நடக்கிறது. அரசுகளும், பெரும் வியாபார நிறுவனங்களும் சாதாரண மக்களை கண்காணித்து கெடுபிடிகளை செய்து வருகின்றன. அதற்கான நோக்கம் பல்வேறாக உள்ளது. உளவு அமைப்புகள் இதற்காக செயல்படுகின்றன.
பெரும்பாலான நாடுகள் நடத்தும் இதுபோன்ற அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் விதமாக, தனித்துவத்துடன் செயல்படுவோர் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. எட்வர்ட் ஸ்நோடன், ஜூலியன் அசாஞ்சே போன்றோர் குறித்த விபரங்கள் உள்ள நுால்.
– ஒளி