கையெழுத்தை வைத்து குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்பர். அதை மாற்றி அமைத்து நல்ல குணங்களை எப்படி கொண்டு வரலாம் என்று அருமையான எடுத்துக்காட்டுகளுடன் சொல்லும் நுால்.
ஒருவரது கையெழுத்தில் ஒவ்வொரு வரியிலும் இருக்கும் சாய்வு வலது பக்கமா அல்லது இடது பக்கமா என்பதில் அவரது சிந்தனையும், நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கையும் தெரிய வரும். இத்துடன் மாதிரி எழுத்துகளைக் காட்டி உதாரணத்துடன் சொல்வதில் திறமை வெளிப்படுகிறது.
தன்னம்பிக்கை, போராடும் குணம் உள்ளவர், ராஜதந்திரி விசுவாசம் மிக்கவர் கையெழுத்துகள் எப்படி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கையொப்பம் இடும் விதங்கள் குறித்து பயனுள்ள குறிப்புகள் தரும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்