பாரதியார், பாரதிதாசன், சிங்காரவேலர், கவிமணி போன்ற தமிழ் ஆளுமைகள் பற்றிய சுருக்கமான வரலாறாக உள்ள நுால். இலங்கையைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் குறித்தும் உள்ளது. சுய குறிப்புகள், தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
ஜவஹர்லால் நேரு, சர்வாதிகாரி முசோலினியை சந்திக்க மறுத்த நிகழ்வு, தகுதி வாய்ந்தோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படாமை, உழவர் படும் இன்னல்கள், உலகை உலுக்கிய மூலதனம் நுால் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன.
விஞ்ஞானி டார்வின் எழுதிய நுால்கள் பற்றியும், புகழ்பெற்ற புதினங்களான விக்டர் ஹ்யூகோவின், ‘லே மிசரபிள்ஸ்’ மற்றும் டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் பற்றியும் குறிப்பிடும் நுால்.
-–- புலவர் சு.மதியழகன்